ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டம் துவக்கம்; முடிவில் மாற்றம் இல்லை என்கிறார் துரை வைகோ

33


சென்னை: சென்னையில் ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது. ''கட்சி பொறுப்பில் இருந்து விலகிய என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை'' என துரை வைகோ நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது. ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். துரை வைகோ விலகல் குறித்து நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கருத்தும் கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.




ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராஜினாமா நான் கொடுத்தது தான். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நிர்வாகிகள் தங்கள் கருத்தை தலைமையிடம் பிரதிபலிக்கட்டும். ராஜினாமா குறித்து கட்சி மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். காரணம் குறித்து அறிக்கையில் தெளிவாக கூறியிருக்கிறேன்.


ம.தி.மு.க.,தான் வைகோ, வைகோ தான் ம.தி.மு.க., இதில் எந்த மாற்றமும் கிடையாது. என்னால் கட்சிக்குள் எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். கட்சிக்குள், எதனால் பிரச்னை வந்தது என்பது நிர்வாகக்குழு கூட்டத்திற்குப்பின் தெரியும். கட்சியை யாரும் இழிவுபடுத்தாதீர்கள் என்பது தான் எனது அறிவுறுத்தல். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement