ஓரிக்கை சாலை நடைபாதைக்கு இரும்பு கிரில் தடுப்பு அமைப்பு

ஓரிக்கை:சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர் முதல், செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள புறவழி சாலையான, ஓரிக்கை மிலிட்டரி சாலை, ஏழு கி.மீ., நீளமும், 5.5 மீட்டர் அகலமும் கொண்டது.

கனரக வாகன போக்குரவத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை -- கன்னியாகுமாரி தொழிற்தட திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகளின் பாதுகாப்புக்காக, கண்ணகிபுரம், அப்பாவு நகர், நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதியில், நடைபாதைக்கு இரும்பு கிரில் வாயிலாக தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement