நெற்களமாக மாறிய சாலை சின்னக்களக்காட்டூரில் அவலம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அறுவடை செய்யும் நெற்கதிர், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க, நெற்களம் இல்லாததால், தக்கோலம் ---- திருவாலங்காடு ரயில் நிலைய சாலையை நெற்களமாக மாற்றி உலர்த்தி வருகின்றனர்.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சின்னகளக்காட்டூரில் நெற்களம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
-
பல்கலை மீது டிரம்ப் நடவடிக்கை பாதகமான விளைவை ஏற்படுத்தும்!
-
கணவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய மனைவி
-
கர்நாடகா முன்னாள் டி.ஜி.பி., படுகொலை; மனைவி கைது
-
அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்கொடி
-
மனைவி, மாமியார் மிரட்டல்; கணவர் துாக்கிட்டு தற்கொலை
Advertisement
Advertisement