நடந்து சென்ற பெண்ணிடம் மொபைல் போன் பறித்த வாலிபர் கைது

கீழ்ப்பாக்கம்:கீழ்ப்பாக்கம் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகாஷினி, 23. இவர் 16ம் தேதி மாலை, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், சுகாஷினியிடம் மொபைல் போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்படி, கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்ததில் பெருங்களத்துார் ஆர்.எம்.கே.., நகரை சேர்ந்த சந்தோஷ், 23 என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement