சிதறி கிடக்கும் மணல் குவியல் தடுமாறும் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் உள்ளது. ஆந்திரா நோக்கிய மார்க்கத்தில், மேம்பாலம் துவங்கும் இடத்தில், பக்கவாட்டில் இருந்த மண், மூன்று நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் போது கரைந்து ஓடியது.

கரைந்தோடிய மணல், மேம்பாலத்தை ஒட்டியுள்ள இணைப்பு சாலையில் பரவி கிடக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக பெத்திக்குப்பம் இணைப்பு சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement