மகள் கொலையில் பெற்றோர் பிறழ்சாட்சியம்; கணவர், மாமியார் உள்ளிட்ட மூவர் விடுதலை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் மகள் கொலை வழக்கில் அவரது பெற்றோரே பிறழ்சாட்சியமளித்ததால் கணவர், மாமியார் உள்ளிட்ட மூவரை நீதிமன்றம் விடுவித்தது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உபகாரமாதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பால் 42. இவருக்கும் பொன் இசக்கி என்பவருக்கும் 2009ல் திருமணம் நடந்தது.
இரு குழந்தைகள் உள்ளனர். பொன் இசக்கிக்கும் மற்றொரு நபருக்கும் தொடர்பு இருந்ததால் ஆத்திரமுற்ற கணவர் ஜான்பால் 2017 மே 14 ல் மனைவியை வெட்டி கொலை செய்தார்.
பொன் இசக்கியின் தந்தை முத்துசாமி புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஜான்பால், அவரது தாயார் அந்தோணியம்மாள் மற்றும் நண்பர் மகாராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
முக்கிய சாட்சியான கொலையான பொன் இசக்கியின் தந்தை முத்துசாமி, தாயார் இசக்கியம்மாள் உள்ளிட்டவர்கள் சம்பவத்தின் போது புகார் அளித்தும் வழக்கு விசாரணையின் போது கொலையாளி குறித்து தெரியாது என பிறழ்சாட்சியமளித்தனர்.
இதையடுத்து ஜான் பால், அவரது தாயார் மற்றும் நண்பரை நீதிபதி பத்மநாபன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
மேலும்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு பா.ஜ.,வுக்கு லட்சுமி கேள்வி
-
பொது இடத்தில் குப்பை இன்று முதல் விழிப்புணர்வு
-
கருவை கலைத்த சிறுமி ஆட்டோ ஓட்டுநர் கைது
-
துப்புரவு ஊழியர்கள் நிரந்தரம் சித்தராமையா திட்டவட்டம்
-
பூணுாலை கத்திரிகோலால் வெட்டிய அதிகாரிகள் தார்வாட் தேர்வு மையத்தில் நடந்த அடாவடி
-
பனசங்கரி சந்திப்பு நடை மேம்பாலம் பொது மக்களுக்காக மெட்ரோ திட்டம்