பொது இடத்தில் குப்பை இன்று முதல் விழிப்புணர்வு

பெங்களூரு: பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது என இன்று முதல் விழிப்புணர்வு பிரசாரத்தில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் ஈடுபடுகிறது.
பெங்களூரில் உள்ள பல பகுதிகளின் சாலையோரங்களில் குப்பைகழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்ட பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை, நகரில் உள்ள பல பகுதிகளில், துாய்மை பணிகள் குறித்தும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது எனவும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறது.
திடக்கழிவு மேலாண்மை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், குடியிருப்பாளர் நல சங்கங்கள், தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இதே வேளையில், கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து சோதனை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு