கருவை கலைத்த சிறுமி ஆட்டோ ஓட்டுநர் கைது
எலஹங்கா: பெங்களூரு, எலஹங்கா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கோகிலு கிராசில், மூன்று நாட்களுக்கு முன், குப்பை தொட்டியில், பிளாஸ்டிக் காகிதத்தில், சுற்றப்பட்ட நிலையில் 'ஆண் கரு' கண்டெடுக்கப்பட்டது.
வழக்கு பதிவு செய்த எலஹங்கா போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வயதான நபர், பிளாஸ்டிக் கவரை வீசியது தெரியவந்தது. அவரை கண்டுபிடித்து விசாரித்த போது, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமி கொடுத்தார் என கூறியுள்ளார்.
இதையடுத்து, அச்சிறுமியிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். இதில் பல தகவல்கள் வெளி வந்தன. இச்சிறுமி பி.யு.சி., படித்து வந்தார். படிப்பையும் பாதியில் நிறுத்தியது தெரியவந்தது.
சிறுமியும், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த பாரத், 21, என்ற வாலிபரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதி அளித்ததால், இருவரும் நெருக்கமாகினர். இதில், சிறுமி கர்ப்பமானார்.
இதை வீட்டில் தெரிவித்தால் தொலைத்து விடுவர் என்று அஞ்சிய சிறுமி, தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஆலோசனைப்படி, 'கருக்கலைப்பு மாத்திரை' வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால் கரு கலைந்தது. அன்றைய தினம், தனது நண்பர்களிடம் கருவை கொடுத்து, பிளாஸ்டிக் கவரில் நன்றாக சுற்றி, பக்கத்து வீட்டு முதியவரிடம் கொடுத்து சாக்கடையில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து, சிறுமியை கர்ப்பமாக்கிய பாரத்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு