வாகன ஏற்றுமதி 19 சதவிகிதம் அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த 2025ம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்து 53 லட்சத்தை தாண்டியுள்ளதாக சியாம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சியாம் எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருப்பதாவது:

வெளிநாட்டு சந்தைகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பயணியர் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களுக்கான தேவை வலுவாக இருந்ததன் காரணமாக, இந்தியாவின் வாகனங்கள் ஏற்றுமதி 2025ம் நிதியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து 53.63 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய நிதியாண்டான 2023 - 24ல், 45 லட்சமாக இருந்தது.

இந்தியாவின் உற்பத்தி தரம் மேம்பட்டு வருவதால், சில நிறுவனங்கள் வளர்ந்த சந்தைகளுக்கும் வாகனங்களை ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளன. புதிய மாடல்கள் மற்றும் புதிய சந்தைகள், இரு சக்கர வாகன ஏற்றுமதிக்கான தடத்தை விரிவுபடுத்த உதவியுள்ளன.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement