கோரிக்கைகளை வலியுறுத்தி ஜே.சி.பி., சங்கம் போராட்டம்

உடுமலை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குடிமங்கலம் வட்டார ஜே.சி.பி., உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில், ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது: டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக, ஜே.சி.பி., தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில் பாதிப்பு நீங்க, அனைத்து வாகன உரிமையாளர்களும் ஒருங்கிணைந்து, ஒரே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தில், ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

போராட்டத்தையொட்டி, குடிமங்கலத்தில், 50க்கும் அதிகமான ஜே.சி.பி., பொக்லைன் வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement