விமானம் மீது மோதிய வேனால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது, 'டிடி' எனும் டெம்போ டிராவலர் வேன் மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
விமான நிலையத்தில், விமானங்கள் பழுது பார்க்கும் பகுதியில் இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் இன்ஜின் பழுது பார்க்கப்பட வேண்டியிருந்தது.
கடந்த 18ம் தேதி மதியம் 12:15 மணி அளவில், விமானங்களுக்கு பணியாளர்களை அழைத்து செல்லும் 'டிடி' வேன் வந்து கொண்டிருந்தது. திடீரென, பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானத்தின் முன் பக்கத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், வேன் ஓட்டுநரை மீட்டனர். தகவல் அறிந்ததும் சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த விபத்து குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. விசாரணை நடந்து வருகிறது. இனி இதுபோன்று நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிட்டு உள்ளது.
மேலும்
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
-
கடனை செலுத்தாத தம்பதி மீது வழக்கு