கரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

நெகமம் : நெகமம், காட்டம்பட்டி ஊராட்சி காட்டம்பட்டிபுதுார், ஸ்ரீதேவி பூ தேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை, மங்கள இசை, சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, மூலவர் விஸ்வரூப தரிசனம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சிகள் நடந்தது.

மேலும், பக்தர்கள் சுவாமியை தரிசித்து பஜனை பாடல்கள் பாடினர். தொடர்ந்து சுவாமிக்கு மஹா அலங்காரம், விசேஷ ஹோமங்கள் மற்றும் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பின்னர் மாங்கல்யதாரணம், மாலை மாற்றுதல், தாரைவார்த்தல் மற்றும் தேங்காய் உருட்டும் நிகழ்வு நடந்தது. பின் ஊஞ்சல் சேவை, உற்சவர்கள் திருவீதி உலா, சாற்று முறை, மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது.

Advertisement