மாநில ‛கிக் பாக்ஸிங்' போட்டிக்கு காஞ்சி வீரர்கள் 49 பேர் தேர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான, கிக் பாக்ஸிங் போட்டி, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 7 - 9 வயதுடைய சில்ரன் பிரிவு, 10 - 15 வயதுடைய சப் -- ஜூனியர் பிரிவு, 16 - 18 வயதுடைய ஜூனியர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட சீனியர் என, 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில், காஞ்சிபுரத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இப்போட்டியில் 49 பேர் தங்கம், 12 பேர் வெள்ளி, 10 பேர் வெண்கலம் என, மொத்தம் 71 பதக்கங்களை வென்றனர்.

இதில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனையர் 49 பேர், அடுத்த மாதம், 9 - 11ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான ‛கிக் பாக்ஸிங்' போட்டிக்கு தேர்வாகி உள்ளனர் என, காஞ்சிபுரம் கிக் பாக்ஸிங் அமெச்சூர் சங்க செயலர் அருண், துனை செயலர் பாபு, பயிற்சியாளர் கணேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement