கும்பாபிேஷகத்திற்கு எம்.எல்.ஏ., நன்கொடை

புதுச்சேரி: பாரதிபுரம் யோகமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்திற்கு நேரு எம்.எல்.ஏ., ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

புதுச்சேரி கோவிந்தசாலை பாரதிபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள யோகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா வரும் 23ம் தேதி நடக்கிறது.

விழாவிற்கு உருளையன்பேட்டை எம்.எல்.ஏ., நேரு, தனது சொந்த நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள், புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள், பிரமுகர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement