பா.ஜ., சார்பில் வக்ப் சட்ட சீர்திருத்த பயிற்சி வகுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் வக்ப் சட்ட சீர்திருத்தம் தொடர்பான பயிற்சி வகுப்பு பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார். மாநில சமூக வலைதள பிரிவு அமைப்பாளர் மகேஷ் ரெட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பா.ஜ., தேசிய செயலாளரும், தமிழ்நாடு பா.ஜ., மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கலந்து கொண்டு வக்ப் சட்ட திருத்தம் தொடர்பான கருத்துகள் குறித்து பேசினார். மேலும் இதுபோன்று பயிலரங்கம் மாநில, மாவட்ட அளவில் நடத்துமாறு அவர் அறிவுறுத்தினார், இதில் சிறுபான்மைய அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் இப்ராஹிம், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன், எம்.எல்.ஏக்கள்., ராமலிங்கம், அசோக்பாபு, மாநில பொது செயலாளர் மோகன் குமார், மவுலிதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுபான்மை பிரிவின் மாநில துணை தலைவர் அப்துல் பாசித் நன்றி கூறினார்.
மேலும்
-
கால்நடை மருந்தகங்களில் விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்க வேண்டுகோள்
-
பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க பூஜை
-
அரூர் கடைவீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் அவதி
-
கோவிலுாரில் 177ம் ஆண்டு பாஸ்கு பெருவிழா திருப்பலி
-
'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறாது'
-
குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு விழா