அ.தி.மு.க., மாநில செயலாளர் முதல்வரிடம் மனு

புதுச்சேரி: மீனவ சமுதாய மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை பெறக்கூடிய வயது மற்றும் நிதியுதவியை விவசாயிகளுக்கும் வழங்கிடவேண்டும் என முதல்வரிடம் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலத்தில் 17 ஆயிரம் விவசாயிகள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். அதில், 55 வயது நிரம்பியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2000 வழங்கப்படுகிறது.

மீன்வளத்துறையின் மூலம் 50 வயது நிரம்பிய மீனவர்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால், மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்று விவசாயிகளுக்கான முதியோர் உதவித் தொகை பெறும் வயதை 55ல் இருந்து 50 ஆக குறைப்படுத்துடன், உதவித் தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போன்று வயதின் அடிப்படையில் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போன்று விவசாயிகளுக்கும் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement