குட்கா விற்ற 2 பேர் கைது
புதுச்சேரி:: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை அடுத்த கருவடிக்குப்பம் பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.
அதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை செய்த போது, கடையில், குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். கடை உரிமையாளர் சுப்ரமணி, 55, என்பவரை கைது செய்தனர்.
அதே போல, மாகி அடுத்த பரக்கால் மெயின் ரோட்டில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்ற பிரசாந்த், 52, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement