பொன்னேரிக்கரை சாலை சேதம் ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைப்பு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் இருந்து, பரந்துார், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் டூ - வீலர், கார், வேன், பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனஙகள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், கனரக வாகனங்கள் அதிகம் சென்றதால், ஆங்காங்கே சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சேதமடைந்த சாலை, ‛பேட்ச் ஒர்க்' பணியாக, ரெடிமேட் தார் கலவை வாயிலாக நேற்று சீரமைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீதமாகும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையை சாலை பள்ளங்களில் பயன்படுத்த எதிர்பார்ப்பு
-
தாம்பரம் பெண்கள் உதவி மையத்தில் காலி பணியிடம்
-
அடிப்படை வசதியில்லாத திருநின்றவூர் பஸ் நிலையம்
-
காதர்நவாஸ் கான் சாலை மேம்பாடு ரூ.13.50 கோடியில் பணிகள் துவக்கம்
-
சந்தையில் வியாபாரம் குறைவதால் விற்பனையின்றி காய்கறிகள் வீண்
-
கையடக்க கருவியில் கோளாறு அபராதம் வசூலிப்பதில் தகராறு
Advertisement
Advertisement