காதர்நவாஸ் கான் சாலை மேம்பாடு ரூ.13.50 கோடியில் பணிகள் துவக்கம்

சென்னை:தேனாம்பேட்டை மண்டலம் நுங்கம்பாக்கத்தில், காதர்நவாஸ் கான் சாலை உள்ளது. இச்சாலையில், 13.50 கோடி ரூபாய் செலவில், பாதசாரிகள் வளாகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து, உதவி செயற்பொறியாளர் வித்யா கூறியதாவது:

காதர்நவாஸ் கான் சாலையில், 500 மீட்டர் நீளத்திற்கு பாதசாரிகள் வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக இங்கு, 70 லட்சம் ரூபாய் செலவில், 4.5 மீட்டர் அகலத்தில், 500 மீட்டர் நீளத்திற்கு, கிரானைட் கற்கள் கொண்டு சாலை அமைக்கப்படுகிறது.

தவிர 80 வண்ண விளக்குகள், 300 இருக்கைகள், மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால்வாய், சிறிய கடைகள், மாற்றுத்திறனாளி வசதிக்காக சாய்வு தளம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.

பாதசாரிகள் நடப்பதற்கென, இருபுறமும், 2 மீட்டர் அகலத்திற்கு நடைபாதை, 300 எம்.எம்., விட்டம் உடைய கழிவுநீர் குழாய், வாகனங்கள் செல்ல, 4.5 மீட்டர் சாலை அமைக்கப்படுகிறது.

இச்சாலை ஒருவழிச்சாலையாகவும், வாகனங்கள் நிறுத்துவதற்கென அடுக்குமாடி வாகன நிறுத்தமும் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement