கெங்கையம்மன் கோவில் பந்தகால் நடும் நிகழ்ச்சி

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கெங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, நாளை மறுநாள் செவ்வாய் அன்று நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, நேற்று, காலை 7:00 மணிக்கு, பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

அதில், அப்பகுதி பெண் பக்தர்கள் பங்கேற்று பந்தகால் மர கம்பத்திற்கு குங்குமம், மஞ்சள் வைத்து தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர்.

அதை தொடர்ந்து, கோவில் வளாகப் பகுதியில் யாகம் வளர்த்து பந்தகால் நடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை, கங்கையில் இருந்து அம்மன் திரட்டுதல் மற்றும் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், மதியம் கூழ்வார்த்தலும், அன்று இரவு 6:00 மணிக்கு தீமிதி விழாவும், அதை தொடர்ந்து அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

Advertisement