கோவில் குளத்தில் துாய்மைப் பணி

காஞ்சிபுரம்:ஆதி சிவன் பவுண்டேசன் மற்றும் தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேசன் சார்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் மாகாளேஸ்வரர் கோவிலில் , துாய்மைப் பணி நடந்தது.

இதில், 80க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் துாய்மைப் பணியாக இரு கோவில் வளாகத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றினர்.

குமரகோட்டம் கோவில் குளத்தை துாய்மைப்படுத்தினர். இக்குளத்தில் நீர் ஊற்றுக்காக ஏழு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், இரு கிணறுகளை கண்டெடுத்து துார்வாரி சீரமைத்தனர்.

Advertisement