பரந்துார் ஏர்போர்ட்டிற்கு எதிர்ப்பு ஏகனாபுரத்தில் 1,000வது நாள் போராட்டம்
ஏகனாபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைய உள்ளது. இதற்காக, பரந்துார், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 3,500 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களாகும். மீதம், தனியாருக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளாக உள்ளன.
விளை நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும். மேலும், விமான நிலையத்தால் பாதிக்கப்படும் குடியிருப்புகளுக்கு மடப்புரம், மதுரமங்கலம் ஆகிய கிராமங்களில் மாற்று இடம் வழங்கி, மறு குடியமர்வு அமைக்கப்பட உள்ளன.
இந்த விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகப்பட்டு, ஏகனாபுரம் ஆகிய கிராமங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில், ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் இரவு நேர காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதை சார்ந்த விளை நிலங்களை பாதுகாக்க வேண்டும் என, பரந்துார் விமான நிலைய போராட்டக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர், ஆதரவு தெரிவித்து போராட்டக் குழுவினரை ஊக்குவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று, 1000வது நாளை போராட்டக் குழுவினர் எட்டி உள்ளனர்.
மேலும்
-
காதர்நவாஸ் கான் சாலை மேம்பாடு ரூ.13.50 கோடியில் பணிகள் துவக்கம்
-
சந்தையில் வியாபாரம் குறைவதால் விற்பனையின்றி காய்கறிகள் வீண்
-
கையடக்க கருவியில் கோளாறு அபராதம் வசூலிப்பதில் தகராறு
-
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 'ஆட்டோ பிரீபெய்டு' திட்டம் தொய்வு
-
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
-
பல்கலை மீது டிரம்ப் நடவடிக்கை பாதகமான விளைவை ஏற்படுத்தும்!