கணவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய மனைவி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே மாநெல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 37. இவரது மனைவி நாகலட்சுமி, 31. இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த நாகலட்சுமி, கணவர் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியதாக கூறப்படுகிறது.

இருபது சதவீத தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement