பிரைனி ப்ளூம்ஸ் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: திருக்கனுார் பிரைனி ப்ளூம்ஸ் லெக்கோல் சர்வதேச சி.பி.எஸ்.சி., மேல்நிலை பள்ளியில் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

அரவிந்த் கல்விக் குழுமத்தின் சேர்மேன் வழக்கறிஞர் அருண்குமார் தலைமை தாங்கினார். பிரைனி ப்ளூம்ஸ் பள்ளியின் துணை சேர்மேன் திவ்யா முன்னிலை வகித்தார். தலைமை விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி துறை பேராசிரியர் இளையராஜா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement