சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த வைத்தியர் கைது

பாலக்காடு: திருச்சூரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த நாட்டு வைத்தியர் செபாஸ்டியன் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், வட்டேக்காடு பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன், 47. இவர், கொடகரை என்ற பகுதியில், நாட்டு வைத்திய சிகிச்சை மையம் நடத்தி வந்தார். கடந்த, 15ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வலது கை வலிக்கு சிகிச்சைக்காக அங்கு வந்துள்ளார்.
கை கழுவுவதற்கு பெண் ஊழியர்கள் இருந்தும், அவர்களை வெளியேற்றி, சிகிச்சை அளிப்பது போல் அறைக்குள் நுழைந்த செபாஸ்டியன், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியே சொன்னால், கொலை செய்து விடுவதாக, அப்பெண்ணை அவர் மிரட்டியுள்ளார். வீடு திரும்பிய பெண், இரு தினங்களுக்கு பின், சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, கொடகரை போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் தாசின் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, செபாஸ்டியனை நேற்று கைது செய்தனர்.









மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி