57 டன் காய்கறி ரூ.20.78 லட்சத்திற்கு விற்பனை
நாமக்கல்: நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை அறுவடை செய்து, இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 225 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். மொத்தம், 47,355 கிலோ காய்கறி, 9,635 கிலோ பழம், 25 கிலோ பூக்கள் என மொத்தம், 57,015 கிலோ எடையுள்ள விளைபொருட்கள், உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 11,403 பேர் உழவர் சந்தைக்கு வருகை தந்து காய்கறி, பழங்களை வாங்கி சென்றனர்.
இதன் மூலம், 20 லட்சத்து, 78,545 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி, ஒரு கிலோ, 18, கத்தரி, 24, வெண்டை, 30, புடலங்காய், 44, பீர்க்கங்காய், 54, பாகற்காய், 38, சின்ன வெங்காயம், 38, பெரிய வெங்காயம், 25, இஞ்சி, 45 ரூபாய், பூண்டு, 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி