விபத்தில் 15 பேர் காயம்
சேந்தமங்கலம்: சின்ன சேலம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 60; இவர் தன் உறவினர்கள், 51 பேருடன், கடந்த, 15ல் சபரிமலைக்கு தனியார் டிராவல்ஸில் சென்றனர். தரிசனம் முடிந்து, நேற்று முன்தினம், பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கும் தரிசனம் முடித்துவிட்டு கிளம்பினர். பஸ்சை, சின்ன சேலத்தை சேர்ந்த சீனிவாசன், 39, ஓட்டினார்.
நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, புதுச்சத்திரம் மேம்பாலம் அருகே, பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, டிரைவர் சீனிவாசன் கண் அசந்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால், துாத்துக்குடியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு உப்பு லோடு ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த மணிகண்டன், கணேசன், பஸ் டிரைவர் சீனிவாசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி