வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில், ஒரு பெண் உள்பட, மூன்று பேர் பலியாகினர்.
திருச்செங்கோடு, சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன், 58; மனைவி கோவிந்தம்மாள், 52; விசைத்தறி தொழிலாளர்கள். கணவன், மனைவி இருவரும் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, நேற்று மதியம், 1:00 மணியளவில், 'ஸ்பிளண்டர்' டூவீலர் கருவேப்பம்பட்டி பிரிவு ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து வந்த டூரிஸ்ட் வேன், டூவீலர் மீது மோதிய விபத்தில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். முருகன், சிறு காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து, திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
* திருச்செங்கோடு அடுத்த ஏமப்பள்ளி, அக்கம்மாபாளையம் பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் மயில்சாமி, 42, மகேந்திரன், 40; இருவரும், நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, அணிமூர் பிரிவு ரோடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை நோக்கி சென்ற லாரி மோதிய விபத்தில், மயில்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மகேந்திரன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார். திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆத்துார் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திகேயன், 42, என்பவரை கைது செய்தனர்.
மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி