பல்கலைக்கழக துணைவேந்தர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை டில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட கல்வி முன்னேற்றங்கள், பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள், பல்கலைக்கழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான உதவிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவினை துணை வேந்தர் பிரகாஷ் பாபு, கல்வி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு நேரில் வருகை தந்து, கல்வி திட்டங்களை நேரில் பார்வையிடவும் துணைவேந்தர் கேட்டுக்கொண்டார்.

Advertisement