'ரத்ததானம் செய்ய இளைஞர்கள் அதிகளவில் முன்வர வேண்டும்'

கோவை : இ.கம்யூ., நுாற்றாண்டை முன்னிட்டு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததானம் வழங்கும் முகாம், காட்டூர் ரங்கன் வீதியில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமை மேயர் ரங்கநாயகி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, ஏ.ஐ.டி.யு.டி.சி., சங்க பொதுச்செயலாளர் ஆறுமுகம் கூறியதாவது:

மனித உயிர்களைக் காப்பதில், ரத்த தானம் முக்கியப் பங்கு வகிக்கிறது, தானங்களில் சிறந்த ஒன்றாக ரத்ததானம் மதிக்கப்படுகிறது. ஒருவர், ஒருமுறை செய்யும் ரத்த தானம் மூலம், மூன்று பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய சூழலில் நாம் ரத்த தானம் செய்யாவிட்டால், ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்பதே உண்மை. அதனால் இளைஞர்கள் ரத்தம் வழங்கி உயிர் காக்கவேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

இ.கம்யூ., மாவட்ட நிர்வாகிகள் தங்கவேல், சிவசாமி, குணசேகர், பாண்டியன், ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement