சாய்பாபா பாதுகையை தொட்டு வணங்க வாய்ப்பு

கோவை : அன்னுாரை அடுத்த புஞ்சை புளியம்பட்டியில், பவானி சாகர் சாலை,தென் சீரடியில்சக்தி சாய்ராம் தர்மஸ்தலா அமைந்துள்ளது. இக்கோவிலை, ஸ்ரீ சக்தி சாய் டிரஸ்ட் கடந்த எட்டுஆண்டுகளாகப் பராமரித்து வருகிறது.இக்கோவிலுக்கு, சீரடியிலிருந்து சாய்பாபாவின் பாதுகை கொண்டு வரப்படவுள்ளது.

ஸ்ரீ சக்தி சாய் டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் ஜெகநாதன் கூறியதாவது:

ஏப்.,22ம் தேதி (நாளை), சாய்பாபா பாதுகை வரும் நிலையில், 23ம் தேதி காலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை, சாய்பாபாவின் புனித பாதுகையை, பொதுமக்கள் தொட்டு வணங்கலாம்.

நாள் முழுவதும்பல இறை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய அரங்கேற்றங்கள் நடைபெறும்.புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி டிரஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த, 500 தன்னார்வலர்கள் இத்திருப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவில் கட்ட, பயன்படுத்தப்பட்ட பிங்க் நிற மார்பிள் கற்களைப் பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மதிப்பில், தென் சீரடி சாய்பாபா கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒன்றரை ஆண்டுகளில், கோவில் குடமுழுக்கு விமர்சையாக நடைபெற உள்ளது.

இக்கோவிலின் கட்டுமானத்தில், தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் பலரும், கோவில் கட்டுமானத்திற்கான கற்களை அடுக்கி வைத்துச் செல்கின்றனர். அனைத்து பக்தர்களும் இப்பணியில் ஈடுபடலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement