கல்லுாரி மாணவர் லாரி மோதி பலி

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருத்துறையூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் சதானந்தம். இவரது மகன் யுவராஜ்,16;
இவர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கல்லுாரியில் டிப்ளமோ பிசியோதெரபிஸ்ட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மதியம் 2:30 மணிக்கு சொந்த வேலையாக திருத்துறையூரில் இருந்து அக்கடவல்லி நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
ஊராட்சி தலைவர் அலுவலகம் அருகில் வந்த போது, எதிரில் வந்த லாரி, பைக் மீது மோதியதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement