மது விற்றவர் கைது

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை சுற்று வட்டார பகுதி முழுவதும் நுாற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை குறி வைத்து, இரவு, பகலாக சட்ட விரோதமாக மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. சட்டவிரோத மது விற்பனையால், வெப்படை சுற்று வட்டாரத்தில், 'குடி'மகன்களின் நடமாட்டமும் இரவில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வெப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த சதீஸ், 35, என்பவரை கைது செய்து, 22 மது பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

Advertisement