திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் வீதியில் ரூ.1.16 கோடியில் சிமெண்ட சாலை

திண்டிவனம்: திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் வீதியில் நகராட்சி சார்பில் ரூ.1.16 கோடி மதிப்பில் சிமெண்ட் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

திண்டிவனம் நகராட்சி பகுதியில் ரூ. 265 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றது.

இதில் பிராதன போக்குவரத்து சாலையான ஈஸ்வரன் கோவில் வீதியில், பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்தும், புதிய சாலை போடமல் இருந்தது.

இந்நிலையில் நகராட்சி சார்பில் ஈஸ்வரன் கோவில் வீதியில் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்க ரூ.1.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 19 ம் தேதி பூமி பூஜையுடன் பணிகள் துவங்கியது.

திண்டிவனம் பஸ் நிலையத்திற்கு வரும் பிராதன சாலையாக ஈஸ்வரன் கோவில் வீதி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதிற்காக, பகுதி பகுதியாக பிரித்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகின்றது.

ஏற்கனவே தீர்த்தக்குளம் முருகன் கோவிலிருந்து எம்.ஆர்.எஸ்.ரயில்வே கேட் வரை பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது அடுத்த கட்டமாக தேவங்கர் கோவில் பகுதியில் நேற்று சிமெண்ட் சாலை போடும் பணிகள் நடந்தது.

Advertisement