குடியிருப்பு பகுதி பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா பொருத்துங்க!

பொள்ளாச்சி : 'குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்,' என, பொள்ளாச்சியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி, 13வது வார்டில், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது:
குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த குடியிருப்பு பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அனைவரும் முன்வர வேண்டும். குற்றம் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக பிடிக்க வாய்ப்பாக இருக்கும். மேலும், வீட்டின் பாதுகாப்பினையும் உறுதி செய்யலாம்.
பெண்கள் அதிகளவு நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும்படி நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.பாலியல் குற்றங்களை தவிர்க்க குழந்தைகளிடம் நல்லது எது, கெட்டது எது என தெரிவிக்க வேண்டும். குழந்தைகளின் பிரச்னைகளை கேட்டறிந்து அதை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
கவுன்சிலர் மணிமாலா, தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கலாசாரம் தொடர்பான மோடியின் உரைகள் தொகுப்பு வெளியீடு
-
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் கோலாகலம்
-
கறிக்கோழி வளர்ப்பு தொகை கட்டுபடியாகவில்லை! போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு
-
கஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது
-
பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க 15 கிடா வெட்டி விருந்து அளித்த அமைச்சர்
-
லாட்டரி விற்ற 2 பேர் கைது