மனைவியுடன் கள்ளக்காதல் டிரைவரை தாக்கிய ரவுடி கைது

தலகட்டாபுரா: கள்ளக்காதல் விவகாரத்தில் வேன் டிரைவரை கடத்தி சென்று தாக்கிய, ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு தலகட்டபுராவில் வசிப்பவர் கிரண், 35; வேன் டிரைவர். கடந்த 8ம் தேதி கிரணிடம் மொபைல் போனில் பேசிய ஒரு பெண், 'கோலாருக்கு சுற்றுலா செல்ல வேண்டும்.

உங்கள் வேனை வாடகைக்கு எடுத்து வருகிறீர்களா' என்று கேட்டார். இதற்கு ஒப்புக்கொண்ட கிரண், பெண் கூறிய இடத்திற்கு சென்றார். ஆனால் அங்கு பெண் வரவில்லை. நான்கு பேர் வந்தனர்.

கிரணை அவரது வேனில் கடத்தி சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தாக்கினர். அவரிடம் இருந்து 10,000 ரூபாயை பறித்துவிட்டு தப்பினர். தாக்குதல் குறித்து கிரண் அளித்த புகாரில், தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், கிரணை தாக்கியதாக தலகட்டபுரா அருகே அவலஹள்ளி கிராமத்தின், ரவுடி மஞ்சேஷ், 36, அவரது கூட்டாளிகள் திலீப், 30, சந்திரசேகர், 28, நுாதன், 32 ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

கிரணுக்கும், மஞ்சேஷ் மனைவிக்கும் இடையில் கள்ளக்காதல் இருந்து உள்ளது. கிரணிடம் இருந்து கள்ளக்காதலி 40,000 ரூபாய் வாங்கி உள்ளார்.

இந்த விவகாரம் மஞ்சேஷுக்கு தெரியவந்தது. இதனால், தன் நண்பர்களுடன் கிரணை கடத்தி சென்று தாக்கியது தெரியவந்து உள்ளது.

Advertisement