பள்ளிகளில் மாணவியருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு
பெங்களூரு: அரசு நிதியுதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், நர்சரி முதல் உயர் நிலைப்பள்ளி வரை, 50 சதவீதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதை, கல்வித் துறை கட்டாயமாக்கியுள்ளது.
இது குறித்து, கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக பாட திட்டங்கள், சி.பி.எஸ்.சி., - ஐ.சி.எஸ்.இ., உட்பட மத்திய பாட திட்டங்களை செயல்படுத்தும், அனைத்து தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., - யு.கே,ஜி., ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அட்மிஷன் அளிக்கும் போது மாணவியருக்கு 50 சதவீதம் ஒதுக்க வேண்டும்.
அரசு நிதியுதவி பெறும் மற்றும் பெறாத அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், இந்த விதிமுறை பொருந்தும். ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும் சீட்களுக்கு, எதிர்பார்த்த அளவில் மாணவியர் விண்ணப்பிக்கவில்லை என்றால், மீதியுள்ள சீட்களை மாணவர்களுக்கு அளிக்கலாம்.
மாணவியருக்கு 50 சீட்களை ஒதுக்குவதுடன், எஸ்.சி., - எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு நிர்ணயித்த ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில், அதே சமுதாய மாணவர்களுக்கு அட்மிஷன் அளிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் கல்வியாண்டு துவங்கும் முன்பே, அட்டவணை, பள்ளியில் இருப்புள்ள சீட்கள், வகுப்பு வாரியான கட்டணம் தொடர்பான தகவல்களை அறிவிக்க வேண்டும். வெளிப்படையாக அட்மிஷன் நடக்க வேண்டும்.
அந்தந்த தொகுதி கல்வி அதிகாரிகள், பள்ளி முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தி, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பள்ளிகளின் பட்டியலை பெற்றோர் ஆய்வு செய்து, தகுதியான பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளுக்கு சீட் பெறலாம்.
டொனேஷன் உட்பட அதிகமான கல்வி கட்டணம் வசூலித்தால், இட ஒதுக்கீடு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம், பெற்றோர் புகார் செய்ய வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களின் அட்மிஷனுக்கு, தனியாக எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு நடத்த கூடாது. இந்த உத்தரவை மீறினால், கல்வி உரிமை சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கலாசாரம் தொடர்பான மோடியின் உரைகள் தொகுப்பு வெளியீடு
-
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் கோலாகலம்
-
கறிக்கோழி வளர்ப்பு தொகை கட்டுபடியாகவில்லை! போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு
-
கஞ்சா விற்பனை வாலிபர்கள் கைது
-
பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா சிறப்பாக நடக்க 15 கிடா வெட்டி விருந்து அளித்த அமைச்சர்
-
லாட்டரி விற்ற 2 பேர் கைது