பா.ஜ., மதுரை பெருங்கோட்டதொண்டர் சந்திப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பா.ஜ., மதுரை பெருங்கோட்ட தொண்டர் சந்திப்பு நிகழ்ச்சி, பூத் கமிட்டியை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச். ராஜா, மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர். மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்டச் செயலாளர் முத்து குமார், கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கமலஹாசன், மேற்கு ஒன்றிய தலைவர் காளியப்பன், வெளிநாடு, அண்டை மாநில தமிழர் நலன் பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் ராணி கருப்புச்சாமி, வத்தலக்குண்டு வடக்கு ஒன்றிய பார்வையாளர் கருப்புச்சாமி பங்கேற்றனர்.

Advertisement