ஈஸ்டர் பண்டிகையையொட்டி சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி

கரூர்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கரூரில் உள்ள சர்ச்சுகளில், நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளை நினைவு கூறும் வகையில், கடந்த மார்ச், 5ல் சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கினர்.

ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடந்த, 13ல் அனுசரித்தனர். அதைதொடர்ந்து, கடந்த, 18ல் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலை கரூர் புனித தெரசம்மாள் ஆலயம், பசுபதிபாளையம் புனித கார்மேல் அன்னை பேராலயம், கரூர் சி.எஸ்.சி., லிட்டில் ஹென்றி நினைவாலயம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சுகளில், இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெரு நாளான, ஈஸ்டர் பண்டிகையையொட்டி, சிறப்பு திருப்பலி நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Advertisement