டூவீலர் திருட்டு வாலிபர் புகார்

கரூர்: கரூரில், வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை என, வாலிபர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கரூர் வையாபுரி நகர், நான்காவது கிராஸ் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் தினேஷ், 34; இவர் கடந்த பிப்., மாதம், 20 இரவு, 'பஜாஜ் பல்சர்' டூவீலரை, வீட்டுக்கு முன் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை, தினேஷ் சென்று பார்த்தபோது டூவீலரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 10,000 ரூபாய். இதுகுறித்து தினேஷ் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement