சேதமடைந்த குடியிருப்பு அகற்ற மக்கள் கோரிக்கை

கரூர்: கரூர், தான்தோன்றிமலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளானதால், பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது, பயன்பாட்டில் இல்லாமல் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பல்வேறு வேலை நிமித்தமாக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்பவர்களில் சிலர், வளாகத்தின் அருகே ஓய்வுக்காக குடியிருப்பு அருகில் நின்று செல்கின்றனர். இந்த சேதமடைந்த குடியிருப்பு அருகே நிற்பதால், அச்சமடைகின்றனர்.

எனவே, மக்களின் நலன் கருதி, பழுதடைந்த நிலையில் உள்ள இந்த கட்டடத்தை புதுப்பிக்க அல்லது இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement