வி.சி.க., சார்பில் கொடியேற்று விழா

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்களம் டவுன் பஞ்.,களில் உள்ள வார்டுகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சிக்கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி, அம்பேத்கர் பிறந்த நாள் விழா, கட்சி வளர்ச்சிகள் குறித்து மக்களிடம் விரிவாக விளக்கப்பட்டது. மேலும், கருப்பூர் கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, உப்பிடமங்களம் டவுன் பஞ்., நிர்வாகத்தை வலியுறுத்துவது குறித்து பேசப்பட்டது.
உப்பிடமங்களம் நகர செயலாளர் மணிமாறன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்ற வன்னியரசு, மகளிரணி சாந்தி, மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement