நடராஜர் கோவிலில் இன்று மகாபிேஷகம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மகாபிஷேகம் நடக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடக்கிறது. ஆனித் திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசன காலங்களில் ஆயிரங்கால் மண்டப முகப்பில், சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடக்கிறது.

அந்த வகையில், சித்திரை மாத மகாபிஷேகம் இன்று (21ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி, இன்று காலை ஏக கால லட்சார்ச்சனை, யாக சாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர ஜப பாராயணம் நடக்கிறது.

மதியம் மகாருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகாருத்ர பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயலாளர் சிவசுந்தர தீட்சிதர், பட்டுராஜ தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement