கோவிலுாரில் 177ம் ஆண்டு பாஸ்கு பெருவிழா திருப்பலி

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்த, கோவிலுாரில், புனித சவேரியார் திருத்தலம் உள்ளது. இங்கு, 177ம் ஆண்டு பாஸ்கு பெருவிழா வரும் ஏப்., 25, 26, 27 ஆகிய, 3 நாட்கள் நடக்கவுள்ளது. இதில், முதல் நாள் நிகழ்வாக நேற்று காலை, 8:30 மணிக்கு நடந்த சிறப்பு கூட்டு பிரார்த்தனையை தொடர்ந்து, தர்மபுரி மறைமாவட்ட முதன்மை குரு அருள்ராஜ், திருப்பலி கொடியேற்றினார்.

விழா ஏற்பாடுகளை கோவிலுார் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி மற்றும் அருட்சகோதரிகள், வேதியர், பங்கு பேரவை இளையோர், பக்த சபைகள், இறை மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Advertisement