பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அமைக்க பூஜை

பென்னாகரம்: பென்னாகரம், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் மற்றும் நிழல் கூடம் அமைக்க நேற்று பூஜை நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் கடந்த, 2020 - 21ம் நிதியாண்டில் மூலதன மானிய திட்டத்தில், ரூபாய், 4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்ட் கடந்த, அக்., 24ல், அமைச்சர்கள் நேரு மற்றும் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தனர். சில மாதங்களுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் கட்டுவதில், தி.மு.க., - பா.ம.க.,வினருக்கு இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. பென்னாகரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு பொதுநிதியிலிருந்து, 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், நுழைவாயில் மற்றும் நிழல் கூடம் அமைக்கும் பணிக்கு பூஜை நேற்று, பென்னாகரம் எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி தலைமையில் நடந்தது.

நிகழ்சியில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி மற்றும் எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், தாசில்தார் பிரசன்ன மூர்த்தி, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் செந்தில்குமார், டி.எஸ்.பி., சபாபதி உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர். ஆனால், பா.ம.க., - எம்.எல்.ஏ., நடத்திய நிகழ்ச்சிக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - கம்யூ., - காங்., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டது, பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

Advertisement