நீலகிரியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!

கூடலூர்:கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி பகுதியை சேர்ந்த குமாரசாமி - சரசு, 58, தம்பதி இன்று(ஏப்.21) மாலை, பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று ஸ்கூட்டரில் வீடு திரும்பினர். அப்போது பொக்காபுரம் சாலையில் திடீரென்று வந்த காட்டு யானை, ஸ்கூட்டரை தட்டி விட்டது.
யானையிடமிருந்து தப்பிக்க இருவரும் ஓடினர். ஆனால் யானை துரத்தி சென்று சரசை தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
காயமடைந்த அவர், சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'தங்கத்தின் விலை குறையாது சிறுக சிறுக சேமிப்பதே நல்லது'
-
1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம்: மோடி
-
அன்று இனித்தது; இன்று கசக்கிறதா? முதல்வருக்கு பழனிசாமி கேள்வி
-
தேர்தல் வழக்கு நவாஸ்கனி மனு தள்ளுபடி
-
கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி சென்னைக்கு மாற்றம்
-
கோவில்களில் 85 திருமண மண்டபங்கள்: அமைச்சர் சேகர்பாபு
Advertisement
Advertisement