தேர்தல் வழக்கு நவாஸ்கனி மனு தள்ளுபடி

சென்னை : ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில், கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை வென்றார்.

நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். மனுவில், 'தேர்தல் வேட்பு மனுவில், நவாஸ்கனி உண்மை தகவல்களை மறைத்துள்ளார். ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்' என, குறிப்பிட்டிருந்தார்.

பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி, எம்.பி., நவாஸ்கனி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி, நவாஸ்கனி எம்.பி., தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, தேர்தல் வழக்கை, அடுத்த கட்ட விசாரணைக்கு, ஜூன் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Advertisement