கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி சென்னைக்கு மாற்றம்

புதுடில்லி: உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் ஏழு நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று பரிந்துரைத்துள்ளது.

உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில், 'கொலீஜியம்' செயல்படுகிறது. இந்த கொலீஜியத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், ஏழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை இட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடரை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

நீதிபதி கிருஷ்ணன் நடராஜன், கேரளாவுக்கும், நீதிபதி நெரனஹல்லி ஸ்ரீனிவாசன சஞ்சய் கவுடா குஜராத்துக்கும், நீதிபதி தீக்சித் கிருஷ்ண ஸ்ரீபத் ஒடிஷா உயர் நீதிமன்றத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதிகள் பெருகு ஸ்ரீ சுதா, கசோஜூ சுரேந்தர் முறையே கர்நாடகா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதி கும்பஜடலா மன்மத ராவை, கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.

Advertisement