ஜிம்பாப்வே அணி அபாரம்: வங்கதேச பவுலர்கள் ஏமாற்றம்

சில்ஹெட்: வங்கதேச பவுலர்கள் ஏமாற்ற, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 273 ரன் எடுத்தது.
வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சில்ஹெட்டில் நடக்கிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 191 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 67/0 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஜிம்பாப்வே அணிக்கு பென் கர்ரான் (18), நிக் வெல்ச் (2), கேப்டன் கிரெய்க் எர்வின் (2) ஏமாற்றினர். பிரையன் பென்னட் (57), சீன் வில்லியம்ஸ் (59) அரைசதம் விளாசினர். வெஸ்லி மாதேவரே (24), நியாஷா மாயாவோ (35), ரிச்சர்ட் காரவா (28*) ஓரளவு கைகொடுத்தனர்.
ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 273 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் சாய்த்தார்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி, ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்து, 25 ரன் பின்தங்கி இருந்தது. மஹ்முதுல் ஹசன் ஜாய் (28), மோமினுல் ஹக் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
1.50 கோடி பேருக்கு இலவச 'ஏசி' திட்டமா? ஏமாற வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை
-
'தங்கத்தின் விலை குறையாது சிறுக சிறுக சேமிப்பதே நல்லது'
-
1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம்: மோடி
-
அன்று இனித்தது; இன்று கசக்கிறதா? முதல்வருக்கு பழனிசாமி கேள்வி
-
தேர்தல் வழக்கு நவாஸ்கனி மனு தள்ளுபடி
-
கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி சென்னைக்கு மாற்றம்