குஜராத் அணி அசத்தல் வெற்றி: சுப்மன் கில், சுதர்சன் அரைசதம்

கோல்கட்டா: கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் அரைசதம் கடந்து கைகொடுக்க குஜராத் அணி 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா, குஜராத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் ரகானே, 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சுதர்சன் அரைசதம்: குஜராத் அணிக்கு சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. மொயீன் அலி வீசிய 7வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசிய சுப்மன் கில், 34 பந்தில் அரைசதம் எட்டினார். ஹர்ஷித் ராணா பந்தை சிக்சருக்கு அனுப்பிய தமிழகத்தின் சுதர்சன், நடப்பு சீசனில் 5வது அரைசதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்த போது ரசல் 'வேகத்தில்' சுதர்சன் (52) வெளியேறினார்.
சுப்மன் விளாசல்: ரசல் வீசிய 13வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய ஜோஸ் பட்லர், ஹர்ஷித் ராணா வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். சுனில் நரைன், அரோரா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார் சுப்மன். இரண்டாவது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த போது அரோரா பந்தில் சுப்மன் (90) அவுட்டானார்.
குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 198 ரன் எடுத்தது. பட்லர் (41), ஷாருக்கான் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரகானே ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (1) ஏமாற்றினார். சுனில் நரைன் (17), வெங்கடேஷ் (14) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் ரகானே (50) நம்பிக்கை தந்தார். ரஷித் கான் 'சுழலில்' ஆன்ட்ரி ரசல் (21) சிக்கினார். பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' ராமன்தீப் சிங் (1), மொயீன் அலி (0) வெளியேறினர். இஷாந்த் சர்மா பந்தில் ரிங்கு சிங் (17) ஆட்டமிழந்தார்.
கோல்கட்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ரகுவன்ஷி (27), ஹர்ஷித் ராணா (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆறாவது வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
மேலும்
-
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா கடும் எச்சரிக்கை
-
1.50 கோடி பேருக்கு இலவச 'ஏசி' திட்டமா? ஏமாற வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை
-
'தங்கத்தின் விலை குறையாது சிறுக சிறுக சேமிப்பதே நல்லது'
-
1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம்: மோடி
-
அன்று இனித்தது; இன்று கசக்கிறதா? முதல்வருக்கு பழனிசாமி கேள்வி
-
தேர்தல் வழக்கு நவாஸ்கனி மனு தள்ளுபடி